முதல்வர் மு.க.ஸ்டாலினோடு எடப்பாடி பழனிச்சாமியை ஒப்பிடும் போது எடப்பாடி பழனிச்சாமி 50 சதவீதம் கூட தகுதியற்றவர் என மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு (AV Velu) பேட்டி..
கலைஞர் நூற்றாண்டு பொது கூட்டத்தில் கொடை என பேச வந்து மாற்றிப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு (AV Velu).
மதுரையில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இறுதிக்கட்ட பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மையர் இந்திராணி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு கூறுகையில் “கலைஞர் நூலக கட்டடம் 132 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது, 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக கலைஞர் நூலகத்திற்கு 215 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஜூலை.15 ஆம் தேதி முதல்வர் கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார். கலைஞர் நூற்றாண்டு விழாவையோட்டி கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட உள்ளது, முதல்வர் கலைஞர் நூலகத்தை திறந்து வைத்த பின் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். கலைஞர் நூலகப் பணிகள் 10 ஆம் தேதிக்குள் முடிவடையும்.
நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு வார்த்தை பயன்படுத்தியது காலையில் தான் தெரிய வந்துள்ளது, (பொதுக்கூட்டத்தில் உயர்நீதிமன்றம் கிளை கலைஞர் போட்ட பிச்சை என பேசினார்), பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான வார்த்தைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். உயர்நீதிமன்றம் கலைஞர் கொடுத்த கொடை என்பதற்கு பதிலாக பிச்சை என தவறான வார்த்தையை பயன்படுத்தி விட்டேன்.
பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன், முதல்வர் மு.க.ஸ்டாலினோடு
எடப்பாடி பழனிச்சாமியை ஒப்பிடும் போது எடப்பாடி பழனிச்சாமி 50 சதவீதம் கூட தகுதியற்றவர். கலைஞரிடம் பயிற்சி பெற்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கான முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு தானே வைக்கும், எங்களை பாரட்டவா போகிறார்கள், திராவிடத்துக்குள் ஆன்மிகம் உள்ளது.
திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரித்து பார்க்க முடியாது. மாமன்னன் படம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆத்திரத்தில் பேசி வருகிறார். மாமன்னன் படத்தில் அமைச்சர் உதயநிதி சிறப்பாக நடித்துள்ளார். ஒட்டுமொத்த அருந்ததியர்களுக்கான படம் மாமன்னன்” என பேசினார்.
கலைஞர் நூலக செலவினம் ரூ.215 கோடியாக உயர்ந்துள்ளது, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் நிதி செலவினம் ரூ.114 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.215 கோடியாக உயர்வு, ரூ.132 கோடிக்கு கட்டிடத்துக்கும், ரூ.60 கோடிக்கு நூல்களுக்கும், ரூ.18 கோடிக்கு மர சாமான்களுக்கும், ரூ.5 கோடிக்கு கணினிகளுக்கும் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.