மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் (nomination file) வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளுக்கும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன .
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பிரச்சாரம் என நாடே தற்போது அரசியல் திருவிழாவிற்கு அசுர வேகத்தில் தயாராகி வருகிறது . இதில் ஒவ்வரு கட்சிகளும் தங்களின் எதிர்க்கட்சிகளின் குறைகளை அடுக்கடுக்காய் கூறி மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் இருக்கும் வேளைகளில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறிருப்பதாவது :
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனுவை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் யாருக்கும் அனுமதியில்லை. வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டுமே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 27 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்வோர் எந்த வித குற்ற செயல்களிலும் ஈடுபட்டிருக்க (nomination file) கூடாது. அவர்கள் மீது எந்த வித குற்ற வழக்குகளும் இருக்கக்கூடாது.
இதுமட்டுமின்றி ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெரும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .