மக்களவை தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் (tirupathi) தேர்தல் விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . அந்த அறிவிப்பில் கூறிருப்பதாவது :
தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு தரிசன டிக்கெட், அறைகள் வசதி செய்து தரப்படும்.
நேரில் வரும் தகுதி வாய்ந்த பக்தர்கள் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் தரிசன டிக்கெட் வழங்கப்படும்.
தேர்தல் விதிமுறை அமலால் முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களின் பேரில் ஒதுக்கீடு செய்ய இயலாது.
விஐபி பிரேக் தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு (tirupathi) செய்ய இயலாது என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.