சென்னை மாநகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்ற செவிலியர்கள், கணக்கு அலுவலர் லேப் டெக்னீஷியன்கள், அலுவலக உதவியாளர், உள்ளிட்டோர் தேவை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

50 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது. தற்காலிக அடிப்படையில் 11 மாதங்களுக்கு பணியாற்ற தகுதி உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
எதிர் வரும் அக்டோபர் 7-ம் தேதி வரை www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.