மும்பையில் மூதாட்டி ஒருவர் தன்னை தாக்க வந்த சிறுத்தையை தடியால் அடித்து விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை கோரேகான் பகுதியில் வசிக்கும் வயதான பெண் ஒருவர் ஓய்வெடுப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் உள்ள திறந்தவெளி பகுதியில் அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு பின் பகுதியில் இருட்டிற்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று மெல்ல நகர்ந்து அந்த மூதாட்டியை தாக்கியுள்ளது.

உடனே அந்த மூதாட்டி தன் கையில் இருந்த தடியால் அந்த சிறுத்தையை தாக்கியதும் சிறுத்தை அங்கிருந்து தப்பித்து சென்றது. இந்நிலையில் சிறுத்தை தாக்கியதில் லேசான காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அந்த வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் மூதாட்டியின் தைரியத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.