ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் போட்டியில் டாடா குழுமத்துக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக ஜிதேந்தர் பார்கவா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வரும் நிலையில, அந்நிறுவனத்தை விற்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஏர் இந்தியாவை வாங்க எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் டாடா குழுமமும், ஏர் இந்தியாவிமான நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வந்தன. இந்நிலையில், ஏர் இந்தியா முன்னாள் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா தெரிவிக்கையில், ஏர் இந்தியாவை வாங்க டாடா குழுமும் தீவிரம் காட்டி வருவதாகவும், எனவே அந்த குழுமத்துக்கே வெற்றி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.