இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Research Associate பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:
Research Associate (RA – III) பணிக்கென 02 பணியிடங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி:
இந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Ph.D முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மருத்துவ துறையில் 2553 காலிப்பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வயது:
Research Associate (RA – III) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
SC / ST / Women – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
மாத ஊதியம்:
இந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் DBT / DST விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு செய்யும் முறை:
Research Associate (RA – III) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை(Resume) satlewala@indianoil.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்றைய நாள் முடியும் முன்அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.