என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரையை பணியிடை நீக்கம் செய்து ( velladurai ) தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல ரவுடிகளுக்கு எமனாக வலம் வந்தவர் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் வழக்கில் கைதான ரவுடி, மற்றும் மதுரையில் எஸ்.ஐ.க்களைக் குத்திய ரவுடிகளை என்கவுண்டர் செய்ததில் ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயர் பெற்றவர் வெள்ளத்துரை பல ரவுடிகளையும் அதன் கூட்டத்தையும் ஒடுக்காட்டியவர் .
Also Read : ஜூலைக்குள் போலீசாருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ – வெளியான டக்கர் தகவல்
2003ஆம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்த பின்னர் இவரது பெயர் மேலும் பிரபலமடைந்தது . இதுமட்டுமின்றி சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுண்டர் ஆப்ரேஷனிலும் இவரது பங்கு இருந்துள்ளது .
இதையடுத்து ஏகப்பட்ட முக்கிய வழக்குகளை கையாண்ட வெள்ளத்துரை தற்போது திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் திடீரென தமிழ்நாடு அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணி ஓய்வு பெற இருந்த நிலையில் வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது ( velladurai ) தற்போது பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.