எதிரிகளோடு துரோகிகளும் ஒன்று இணைந்து கழகத்தை உடைக்க முயல்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி செய்யலாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில்..
கழக உறுப்பினர்களுக்கு என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
அனைவரும் கட்சி பணியில் சிறப்பாக பணியாற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொன்விழா எழுச்சி கழக மாநாடு மதுரை மாநகரம் குலுங்கும் அளவுக்கு நடந்தது, 15 லட்சம் பேர் கலந்து கொண்டு வெற்றி மாநாடாக நடத்தினோம். எதிரிகள் அஞ்சும் அளவுக்கு மாநாடு நடைபெற்றது.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி அதிமுக மாநாட்டை விமர்சித்தார், அண்ணா திமுக மாநாடு போல இந்த மாநாடு இருக்காது எடுத்துக்காட்டாக சேலத்தில் இளைஞர் அணி மாநாடு என்றார் சொன்னதிலிருந்து மூன்று முறை தேதி மாற்றப்பட்டு விட்டது. அதிமுகவை விமர்சித்தால் இது தான் .
முழுமையான வாகனங்கள் கிடைத்து இருந்தால் இன்னும் 10 லட்சம் பேர் வரை மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அதிமுக மாநாட்டை பற்றி விமர்சனம் செய்ய உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.
அதிமுக கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது , தீய சக்தி திமுகவை அழிக்கதான் எம் ஜி ஆர் கட்சியை தொடங்கினார்.
அதிமுக மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி , அம்மா மறைவுக்கு பின் 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்.
சோதனை மேல் சோதனையை சந்தித்து அத்தனையும் படிகட்டாக மாற்றி சாதித்ததும் அதிமுக கட்சி தான்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் எனக்கு பிறகும் சிறப்பாக கட்சி இயங்கும் என சொன்னது போல் நம் கட்சி செயல்பட்டுவிட்டது.
இந்த இயக்கத்தை முடக்க தீய சக்தி திமுக செயல்பட்டு வருகிறது.
எதிரிகளோடு துரோகிகளும் ஒன்று இணைந்து கழகத்தை உடைக்க முயல்கிறார்கள்.
தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்து உள்ளது, அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும், தமிழகத்தில் அதிக தொண்டர்கள் கொண்ட ஒரே இயக்கம் அதிமுக.
2 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதிமுகவில் உள்ளனர், வேறு எந்த கட்சியிலும் இந்த அளவுக்கு உறுப்பினர்கள் கிடையாது.
அனைத்து தர மக்களையும் உறுப்பினராக கொண்ட ஒரே கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
ஏழை எளிய மக்கள் கூட உயர்நிலைக்கு வரக்கூடிய நிலை அதிமுகவில் தான் உள்ளது.
எம் ஜி ஆர், ஜெயலலிதா மனித நேயம், சமத்துவம், சகோதரத்துவம் இதையே தாரக மந்திரமாக கொண்டு நாட்டு மக்களுக்காக சிறப்பாக ஆட்சியை கொடுத்தார்கள்.
30 ஆண்டுகால ஆட்சியில் அம்மா ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் செய்யப்பட்ட பணிகள் மூலம் தமிழகம் மிகப்பெரிய முன்னேற்றக் அடைந்து உள்ளது என்று கூறினார்.