திருவள்ளூர் மாவட்டம் ஆஞ்சநேயபுரத்தில் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆஞ்சநேயபுரத்தில் வசித்து வரும் மூர்த்தி என்பவரது மகள் ஆஷா, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். தினமும் இரவு 11 மணி வரை படித்துவிட்டு தூங்க செல்வதை வழக்கமாக கொண்ட மாணவி நேற்று முன்தினமும், வழக்கம் போல் படித்துவிட்டு தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி ஆகியும் மகள் எழுந்து வெளியில் வரவில்லை என மாணவியின் தந்தை கதவை தட்டி உள்ளார். எவ்வளவு தட்டியும் கதவை திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த மூர்த்தி ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.
அப்போது ஆஷா மின் விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை மூர்த்தி இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக மாணவர்களின் தற்கொலை என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு மன அழுத்தம், ஒரு காரணமாக சொல்லபட்டாலும் இதற்கான உண்மையான காரணங்கள் தெரியாமல் பெற்றோர்கள் குழம்பித்தான் போகின்றனர். தற்கொலைக்கு எதிராக பள்ளிகளில் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் தொடர் தற்கொலைகள் கவலை அளிக்கிறது.