இங்கிலாந்து , சவுத் ஆப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. முதல் நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யபட்டது. இரண்டாம் நாளான நேற்று இங்கிலாந்து நாட்டு மகாராணி இரண்டாம் எலிசபத் காலமடைந்ததையடுத்து நேற்றுய நாள் போட்டி ரத்து செய்யபட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று போட்டி தொடங்குமென்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி டாஸ் வென்ற பவுலிங்கை தேர்வு செய்தது. போட்டி ஆரம்பமாகும் முன்பு மைதானத்தில் இரு நாட்டு வீரர்களும் கையில் கருப்பு ரிப்பன் அணிந்து இரண்டு நிமிடம் ராணி எலிசபத் நினைவாக மௌன அஞ்சலி செல்லுத்தினர்.
இங்கிலாந்து நாட்டு தேசிய கீதத்தில் “Oh God save the Queen” என்ற வரி திருத்தப்பட்டு “Oh God save the King ” என்று மாற்றியமைக்கபட்டது. இந்த திருத்தம் செய்யபட்ட தேசிய கீதம் இன்று மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிக்கபட்டது.