தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகவும், மிகவும் பிஸியான நடிகராகவும் மாறியிருப்பவர் யோகிபாபு (yogi babu).
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாபு. அந்த நிகழ்ச்சியில் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தார்.
அதன் பிறகு 2009 ஆம் ஆண்டில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் ஒரு சிறிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தப் படத்தில் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயரே அவருடைய அடையாளப் பெயராக மாறியது.
இந்தி நடிகர் ஷாருக்கானில் இருந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் மற்றும் விஜய் வரை பலருடன் யோகி பாபு நடித்து விட்டார்.
குறிப்பாக முன்னணி நடிகர்களுடன் கால்ஷீட்டை பெறுவது சுலபமாக பெற்று விடலாம்..
ஆனால் யோகிபாபுவின் கால்ஷீட்டை பெறுவது பெறுவது கடினமாக உள்ளதாக பிரபல தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் தெரிவிக்கின்றனர்.
சின்ன படங்களுக்கு லட்சங்களில் தொடங்கி பெரிய படங்களில் கோடியை தொடும் அளவுக்கு யோகி பாபுவின் சம்பளம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் யோகி பாபுவின் நடிப்பில் வெளியான குய்கோ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், அச்சு அசல் நடிகர் யோகி பாபு மாதிரி இருக்கும் நபரின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இவர் பெயர் மணிபாலன் என்றும் வெளி ஊர்களுக்கு செல்லும் போது பலரும் இவரை யோகிபாபு என நினைத்து தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.