நடிகர் பிரேம்ஜியின் திருமணம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்டுள்ளார் .
இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் பன்முக தன்மை கொண்டவர் கங்கை அமரன். அவரின் மூத்த மகன் வெங்கட் பிரபு . இவர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ளார். இளைய மகன் பிரேம்ஜி அமரன் நடிகராகவும் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் திரைத்துறையில், கலக்கி வருகிறார்.
பிரேம்ஜியின் திருமணம் குறித்த கேள்விக்கான பதிலை ரசிகர்கள் பல ஆண்டுகாலமாக கேள்வி எழுப்பி வந்த நிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன் வரும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதற்கான அழைப்பிதழை போஸ்ட் செய்து ரசிகர்களுக்கு நடிகர் பிரேம்ஜி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும் இவரது திருமணம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் இந்து என்பவருடன் ப்ரேம்ஜிக்கு திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரின் இந்த திருமண அழைப்பிதழ் சோசியல் மீடியாவில் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலானது.
இதையும் படிங்க : Big Boss Tamil 8 : எப்போது? போட்டியார்கள் விவரம்!
இந்த நிலையில், நடிகர் பிரேம்ஜியின் திருமணம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்டுள்ளார் .அதில்,இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய இரசிகர்களுக்கும், பந்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!
எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. “பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?” “சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?” இதை எல்லாவற்றையும் விட “பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்குப் பதில்,
வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!
இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மண்மகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன.
மணமகள் மீடியாவைச் சேரந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்! BTW, THE GOAT அப்டேட் விரைவில்.. என்று குறிப்பிட்டுள்ளார்.