தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதே பா.ம.க.வின் வாடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுக என்ன துரோகம் செய்தது என்று ராமதாஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக காலை வாரியத்தால் பாமக தோல்வியுற்றதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் பாமக தோல்வியடைந்ததற்கு மக்கள் வாக்களிக்காததே காரணம் என்று கூறிய பழனிசாமி, பாமகவுக்கு அதிமுக என்ன துரோகம் செய்தது என்று டாக்டர் ராமதாஸ் கூறவேண்டும் என அதிமுக மீதான குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது தான் பா.ம.க.வின் வாடிக்கை என்றும் பழனிசாமி விமர்சித்துள்ளார். கூட்டணியில் இருந்து விலகியதாக பாமக அறிவித்துவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து போட்டி என ராமதாஸ் அறிவித்துவிட்டார் என்றும் எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.