சென்னை வானகரத்தில் பரபரப்பான சூழ்நிலையில் கடந்த ஜூலை மாதம் 11 தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த பொது குழுவில் அணைத்து கட்சி உறுப்பினர்களையும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அமைச்சர் சீவி.சண்முகம் அதை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
முன்னதாக அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீா்மானங்களைத் தவிர மற்ற தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் 23 தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், கட்சியின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 6-ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
தலைமை நீதிபதி அனுமதியுடன் நாளை மறுநாள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த நிலையில் 23 தீர்மானங்களை தவிர எதையும் தடையை மீறி செயல் படுத்தகூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.