தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் ரவியின் உரை உப்பு (Governor’s Speech) சப்பில்லாத ஊசிப்போன உணவு பண்டம் போல் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ரவியை பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி முவைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை அவையில் நிராகரிக்கப்பட்டது.
மேலும் உரையில் உள்ள பல அம்சங்களை ஏற்கவில்லை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் தனது உரையை ஆரம்பிக்கும்போது ஆளுநர் ரவி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தேசிய கீதம் இசைக்கப்படும் முன் ஆளுநர் வெளியேறிய நிலையில் ‘ஜன கண மன இனிமேதான் பாடுவாங்க’ இருந்து கேட்டு செல்லுங்கள் என சபாநாயகர் அப்பாவு கிண்டல் அடித்தார்.
இதையடுத்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார்.
பிப்ரவரி 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை எனவும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை; ஊசிப்போன உணவு பண்டம்; எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்ய உள்ளது என்பது குறித்து ஆளுநர் உரையில் இல்லை என்றார்.
Also Read : https://itamiltv.com/citizenship-act-will-never-be-implemented/
தொடர்ந்து அரசின் உரையை ஆளுநர் புறக்கணித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈபிஎஸ் கூறியதாவது :
இது ஆளுநருக்கும் (Governor’s Speech) சபாநாயகருக்கும் இடையே உள்ள பிரச்னை. எதிர்க்கட்சியான நாங்கள் இதுகுறித்து என்ன சொல்வது?
ஆளுநரையும் அரசையும்தான் கேட்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்து சென்றார்.