வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் குறித்து அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவித்தார்.
இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.இதனைத்தொடர்ந்து மிக ஆவேசத்துடன் பொதுக்குழு மேடையில் இருந்து ஓ .பன்னிர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய திட்டமிட்டு இருந்தனர். புதிய தீர்மானங்கள் எதையும் கொண்டு வரக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் , ‘எடப்பாடி பழனிசாமி விரைவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்’ என தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் ஒற்றை தலைமையில் விவகாரம் பிளவுபட்டு தொண்டர்மத்தியில் அதிர்ச்சியையும் ,குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.