ஈரோட்டில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான (school bus accident) சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த, பள்ளி வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது (school bus accident). இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதையடுத்து, விபத்துக்குள்ளான வாகனத்தை காவல் துறையினர் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.