டிஆர்பி-யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சக்கைப்போடு போட்டு வரும் எதிர்நீச்சல் (ethirneechal) சீரியல் கடந்த ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகவும் பாப்புலர் ஆனதற்கு காரணம் அதன் கதாபாத்திர தேர்வு மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் தான். அதிலும், குறிப்பாக நடிகர் மாரிமுத்து நடிக்கும் குணசேகரன் கதாபாத்திரம் அதிகம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தான் இந்த தொடரையும் இயக்கி வருகிறார். இந்நிலையில், தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து, குணசேகரன் கதாபாத்திரத்தில் பேசிய டயலாக்குகள் தான் மீம் டெம்பிளேட்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு மக்களின் மனநிலையோடு ஒன்றிப்போகும் வகையில் அவர் பேசும் டயலாக்குகள் அமைந்துள்ளன.
மேலும், இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, விபு ராமன், கமலேஷ், சபரி பிரசாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்நீச்சல் (ethirneechal) சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாரிமுத்துவுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
சொல்லபோனால் இதில் ஹீரோவாக நடிக்கும் சபரியை விட இரட்டிப்பு மடங்கு சம்பளம் வாங்குகிறார் மாரிமுத்து. அதாவது, அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
மாரிமுத்துவுக்கு அடுத்தபடியாக மதுமிதா, கமலேஷ், ஹரிப்பிரியா ஆகியோருக்கு தலா ரூ.15 ஆயிரமும், சக்தி, கனிகா ஆகியோருக்கு ரூ.12 ஆயிரமும், சபரி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரமும் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். இதை அறிந்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.