திமுக வாக்குறுதி கொடுத்தது போல், குடும்பத்தலைவிக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதாமாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் எனவும், இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறையாக அறிவிப்பார் எனவும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.