காவிரி மேலாண்மை கூட்டத்தில் பங்கு பெரும் அனைவருக்கும் நல்ல புத்தி தர வேண்டி திருச்சியில் விவசாயிகள் பிள்ளையாரிடம் தோப்புகரணம் போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளான மத்திய மாநில; அரசுகள் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த விவசாயிகளின் விலை பொருட்களுக்கு இரட்டிப்பான விலை வழங்க வேண்டும்,
விவசாயிகள் வாங்கிய வங்கி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நதிநீர் பங்கிட்டு கர்நாடக அரசு உரிய முறையில் கடைபிடித்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும், மேகதாது அணையை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்க கூடாது,
தமிழக முதல்வர் உடனடியாக தண்ணீர் வேண்டி உரிய முறையில் போராட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்வைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் 47ம் நாளான இன்று நாடு முழுவதும் பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடிக் கொண்டு வரும் இந்த வேளையில் பிள்ளையார் சிலையை வைத்து விவசாயிகள் பூஜை செய்தனர்.
அதன் பின்னர், இன்று டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நல்ல புத்தியை கொடுத்து, கர்நாடகா தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பங்கீடு தண்ணீரை தர வேண்டும் என்று வலியுறுத்தி பிள்ளையாரிடம் தோப்பு கரணம் போட்டு நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.