தான் எழுதிய சிறுகதையில் உள்ள அனைத்தும் ‘வாழை’ படத்தில் அப்படியே உள்ளது என எழுத்தாளர் சோ.தர்மன் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் .
படிப்பறிவு , நாகரிக வளர்ச்சி , சமூக நீதி உள்ளிட்ட நாட்டுக்கு தேவையான விஷயங்களை இன்றைய தலைமுறைகளுக்கு விழிப்புணர்வாய் கொண்டு சேர்க்கும் படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் மாமன்னன் .
இதையடுத்து இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரைக்கு வந்துள்ள படமே வாழை . கிராமத்து மனம் மாறாத இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள இந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தை திரைநட்சத்திரங்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read : விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!
இந்நிலையில் தான் எழுதிய சிறுகதையில் உள்ள அனைத்தும் ‘வாழை’ படத்தில் அப்படியே உள்ளது என எழுத்தாளர் சோ.தர்மன் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு சோ.தர்மன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :
வாழை படம் பார்த்தேன். நான் எழுதிய சிறுகதை அப்படத்தில் அப்படியே இருப்பதாக நண்பர்கள் நிறைய பேர் சொன்னார்கள். படத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் 10 ஆண்டுகளுக்கு முன்பே ‘வாழையடி’ என்ற சிறுகதையில் நான் எழுதியுள்ளேன். அதில் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்தும் ‘வாழை’ படத்தில் அப்படியே இருக்கிறது.
சினிமாவுக்காக ஒரு சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் வரும் சிறுவனுடைய உழைப்பு, தரகர், கூலி உயர்வு, ரஜினி – கமல் என எல்லாமே கிட்டத்தட்ட என் சிறுகதையில் இருப்பவைதான். வாழைத்தார் சுமப்பதன் மூலமாக இரண்டு சிறுவர்களுடைய உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது? இதுதான் என் கதையிலும் நான் பதிவு செய்திருக்கிறேன். மாரி செல்வராஜும் அதைத்தான் செய்திருக்கிறார் என சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.