சீனாவில் Breakup செய்த தனது முன்னாள் காதலியே தனக்கு தாயாக வந்ததால் அதிர்ச்சியில் உறைந்த மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவில் நாள் தோறும் ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி நம்மை வியக்க வைக்கிறது .
அந்தவகையில் சீனாவை தற்போது நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது . காதலியை Breakup செய்யுமாறு மகனை வற்புறுத்தி, அதே பெண்ணை 6 மாதத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் பாசக்கார தந்தை.
இதையடுத்து தனது காதலியே தனக்கு தாயாக வந்ததை அறிந்த அதிர்ச்சியில், மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவள் ஏழை, உன்னிடம் உள்ள பணத்தையே விரும்புகிறாள் என மகனிடம் கூறி அவரின் மனதை மாற்றி விட்டு, அதே பெண்ணிற்கு விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்து தந்தை காதலிக்க வைத்துள்ளாராம்.
இந்த சம்பவத்தை பார்க்கும் பொது நாட்டாமை படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் நகைவைச்சுவை காட்சிகள் தான் உடனே நினைவிற்கு வருகிறது.