Mafa Pandiarajan | அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவிய நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.
அதேபோல் எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சித் தாவல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் திடீரென பாஜகவில் இணைந்தார்.
இந்த நிகழ்வு அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு
முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எம்.எல்.ஏ விஜயதரணி டெல்லியில் இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி தமிழக அரசியலில் புயலை கிளப்பியது.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1761982339180367982?s=20
பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன்! உண்மையுடன்!” என்று பதிவிட்டு தனது பழைய பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.
அதில் 3 வருடங்களுக்கு முன் பதிந்த அந்த பழைய பதிவில், “என் இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன்” என்பதை தெளிவு படுத்துகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் பிரதிநிதிகள் கட்சிகள் மாறிவருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் சேர்ந்தார்.
தொடர்ந்து சில அரசியல் பிரமுகர்கள் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில்,தன் மீதான வதந்தி குறித்து மாஃபா பாண்டியராஜன்( Mafa Pandiarajan) விளக்கம் அளித்துள்ளார்.