தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகாரிடித்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை மேற்கொண்டுவருகிறது.இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர்கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது – ஆட்சியர்
பொது இடங்களில் இரு நபர்களுக்கிடையே 6அடி தூரம் இடைவெளி விட்டு நிற்கவேண்டும்,அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது. மேலும் கடைகளின் நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்படவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.