சென்னையில் போலி கரோனா சான்றிதழை ரூ.500-க்கு விற்றதாக இளைஞர் கைது செய்யப்பட்துள்ளார்.
மண்ணடி தம்பு செட்டித் தெருவில் மருத்துவப் பரிசோதனை மையம் நடத்தி வரும் ஹாரிஸ் பர்வேஸ் இந்த மையத்தில் கரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தனது மையத்தின் பெயரில் .500-ரூபாய்க்கு போலியாக கரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்குவதாக அண்மையில் ஹாரிஸ் பர்வேசுக்கு தெரியவந்த நிலையில் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் வடக்கு கடற்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டதில் திருவல்லிக்கேணியை சேர்ந்த இன்பர்கானை கைது செய்தனர்.
இதனை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் ஹாரிஸ் பர்வேஸ் பரிசோதனை மையம் பெயரைப் பயன்படுத்தி கடந்த 6 மாதங்களில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக கரோனா பரிசோதனை சான்றிதழ்ளை 500ரூபாய்க்கு பெற்றுக் கொடுத்துள்ளது தெரியவந்தது.
இந்த போலியான சான்றிதழை வெளிநாடுகளுக்கு செல்பவர்களே அதிகமாக பெற்றுள்ளதாகவும் இதில் சிலர் அந்த சான்றிதழ் போலியானது என்பதைத் தெரிந்தே வாங்கியுள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரைப் பொலிசார் தேடி வருகின்றனர்.