நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!

National-Film-Awards-Actor-Dada-Sakeb-Phalke-Award

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் 25ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ் திரையுலகம் வென்றுள்ள நிலையில் இதற்கான விருதுகள் வழங்கும் விழா வரும் 25ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.

சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்த தனுஷ்ற்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்துக்காக டி.இமானுக்கும் வழங்கப்பட உள்ளது.

National-Film-Awards-Actor-Dada-Sakeb-Phalke-Award
National Film Awards Actor Dada Sakeb Phalke Award

மேலும் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7, என்ற படத்துக்கு சிறப்பு திரைப்படத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இதே விழாவில், திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

Total
0
Shares
Related Posts