குஜராத்தில் இஸ்ரோ விஞ்ஞானி எனக்கூறி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது.இதனையடுத்து சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து கிட்டத்தட்ட 40 நாள் பயணத்திற்கு பிறகு விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி தரையிறங்கியது.பிறகு சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் நீண்ட காலத்திட்டமான சந்திரயான் 3, வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி முதல் பல வெளிநாடுகளின் முக்கிய தலைவர்களும் பாராட்டி வந்தனர்.இந்நிலையில் குஜராத் மாநிலம்,சூரத்தை சேர்ந்த மிதுல் திரிவேதி என்பவர், இஸ்ரோ விஞ்ஞானியைப் போல ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 2022 பிப்.26-ம் ஆண்டு அவர் இஸ்ரோவின் பண்டைய அறிவியல் பயன்பாட்டுத்துறையின் உதவித் தலைவராக ஆள்மாறாட்டம் செய்து போலிக் கடிதம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கும் இஸ்ரோவின் சந்திரயான் -3 திட்டத்துடன் எந்தத் தொடர்பும் என்பது தெரியவந்தது.மேலும் தான் பிரபலமடைய இஸ்ரோ ஊழியர் என்று பொய் சொன்னதாக தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.