நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 74 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரபல ஓவியர் செல்வம் சிறப்பு ஓவியம் ஒன்றை வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டி இறைவன் அருள் அவருக்கு கிடைக்க வேண்டியும்.. “ருத்ராட்சத்தின்” மீது நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் .
Also Read : தனது நீண்டநாள் காதலன் ஆண்டனி தட்டிலை மணந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்..!!
பிரபல நடிகர் ரஜினிகாந்த் எப்போது ருத்ராட்சம் அணிவார், ருத்ராட்சம் சிவபெருமானுடனான ஆன்மீக தொடர்புக்கு முக்கியமானவை, ரஜினிகாந்த் ருத்ராட்சத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார், மேலும் ருத்ராட்சம் தனது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக உணர்கிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினி இன்று தனது 74 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், அவரது உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டி இறைவன் அருள் அவருக்கு கிடைக்க வேண்டியும்,”ருத்ராட்சத்தின்” மீது நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை எனாமல் பெயிண்ட் கொண்டு நான்கு நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்து அசத்தியுள்ளார் .