கார்த்தியின் சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயாள் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
தமிழ் சினிமாவில் எத்தனையோ திறமையான இயக்குநர்கள் இருக்கும் நிலையில் இயக்கிய முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் தான் சங்கர் தயாள்.
கடந்த 2012 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து சகுனி படத்தை இயக்கிய இவர் பின்னர் எந்த திரைப்படங்களையும் எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது யோகி பாபுவை வைத்து குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற திரைப்படத்தை இயக்கி வைத்தார்.
படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தகட்டமாக படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபாடு இருந்தது இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்களின் கூட்டம் ஒன்றை இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் படக்குழு ஏற்பாடு செய்திருந்து.
இந்நிலையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்பாக அவர் கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ செய்ய வேண்டுமென கூறியுள்ளனர் .
இதையடுத்து ஆஞ்சயோ செய்ய தேவையான பணிகள் தொடங்கிய உடனே அவர் தன்னுடைய சுய நினைவை இழந்து உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீர் மாரடைப்பால் உயிரிழந்த இயக்குநர் சங்கர் தயாளின் மறைவுக்கு தற்போது திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.