தமிழ் உள்பட பல மொழிகளில் என்ற பாடிய பிரபல பழம்பெரும் பாடகி பி.சுசீலா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடிகாணிக்கை கொடுத்துவிட்டு வந்த வீடியோ தற்போது செம வைரலாக வலம் வருகிறது.
சிறு வயது முதல் தனது மயக்கவைக்கும் குரலால் பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்தவர் பழம்பெரும் பாடகி பி.சுசீலா. ஐந்து தேசிய விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்ற இவர் தென்னிந்திய சினிமாவின் வரலாறு படைத்த பாடகியாக திகழ்ந்து வருகிறார் .
Also Read : சாராயம் காய்ச்சி ,விற்பனை செய்தவர்களை அழைத்துப் பேச உத்தரவு..!!
தெலுங்கு, தமிழ் ,கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா ,சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர் தனது 88 ஆவது வயதிலும் பூரண நலத்துடன் இருந்து வருகிறார் .
இருப்பினும் வயது முதிர்வு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமல் இருக்கும் இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று சென்றுள்ளார் .சாமி தரிசனம் செய்த பி.சுசீலா நேர்த்திக்கடனாக முடிகாணிக்கையும் கொடுத்துள்ளார்.
திருப்பதியில் பிரபல பழம்பெரும் பாடகி பி.சுசீலா இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.