தந்தையர் தினம் தனது அப்பாவை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று பல விஷயங்களை பிள்ளைகள் முயற்சி செய்கிறார்கள்.நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. அணைத்து கஷ்டங்களை உள்ளடக்கி பிள்ளைகளுக்கு உழைக்கும் தந்தைகளுக்கு விழா சிறப்பித்து சமீப காலமாக கொண்டாடிவருகிறோம்
ஒரு மகன்/மகள் தனது அப்பாவை மகிழ்ச்சிப்படுத்த பெரிய அளவில் ஏதேதோ செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. பல அப்பாக்கள் ஆசைப்படுவது, தான் பெற்ற பிள்ளை நன்றாக படித்து அவர்களுக்கு பிடித்த துறையில் முன்னேறி நல்ல வேலையில் பணி செய்வதுதான்.
பெரும்பாலான அப்பாக்களுக்கு இதுதான் உயரிய கனவாக இருக்கிறது. தந்தையர் தினத்தில் நாம் கொடுக்கும் பரிசுகளை விடவும், இவற்றைதான் அப்பாக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
உங்கள் அப்பா எதிர்பார்க்கும் விஷயத்தை நீங்கள் செய்து விட்டால், அதை விட இந்த உலகில் பெரிய ஒன்று எதுவுமில்லை. இப்படியொரு மன நிறைவான செயலை தான் ஒரு மகன் தனது அப்பாவை சந்தோஷப்படுத்தும் விதமாக செய்துள்ளார்.
இந்த மகன், பயண டிக்கெட் பரிசோதகராக (TTE) ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். இதே இரயில்வே துறையில்தான் இவரது அப்பாவும் பணிபுரிந்து வருகிறார். இவரது அப்பா இரயில்வே காவலராக பணிபுரிந்து வருகிறார். தந்தை மற்றும் மகன் இருவரும் இரண்டு வெவ்வேறு ரயில்களில் பணி செய்து வருகின்றனர்.
இவர்கள் பணி செய்த இரயில்கள் ஒரே இடத்தில் வெவ்வேறு இரயில் பாதையில் சந்தித்து கொண்டது. அப்போது இவர்கள் இருவரும் சில அடி இடைவெளியில் இருந்தனர். அந்த நேரத்தில் ஒரு ரயிலில் பணியில் இருந்த மகன், மற்றொரு ரயிலில் பணியில் இருந்த தந்தையுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். இந்த செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.தந்தையர் தினத்தில் இது போன்ற எதார்த்தமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.