Father kills child by car : பெங்களூரில் காரின் பின்புறம் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது தந்தை கார் ஏற்றியதால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வயது சிறுமியின் தந்தை சிறுமி நின்று கொண்டிருப்பதை பார்க்காமல் தனது காரை ஓட்டிச் சென்றதால் உடல் நசுங்கி சிறுமி இறந்தார். நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் பெங்களூருவின் எச்எஸ்ஆர் லேஅவுட்டில் நேற்று முன் தினம் திங்கள்கிழமை இரவு நடந்துள்ளது.
கடந்த திங்கள் கிழமை (22-04-24) அன்று சிறுமியின் குடும்பம் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பியதாகவும், அப்போது குழந்தை, ஷாசியா ஜன்னத் (2), அவரது தாயார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றனர்.
அப்போது சிறுமியின் தந்தை காரை நிறுத்த முயன்று கொண்டிருந்தபோது குழந்தை வீட்டை விட்டு வெளியே வந்த்துள்ளார். சிறுமி காரின் அருகே இருப்பதை அறியாமல், அந்த நபர் தனது காரை இரண்டு வயது சிறுமியின் மீது ஏற்றியதால் சக்கரத்தின் கீழ் சிக்கி கொண்டுள்ளார்.
உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில், குழந்தையின் தந்தைக்கு எதிராக ஐபிசி பிரிவு 304 ஏ (அலட்சியத்தால் மரணம்) இன் கீழ் எச்எஸ்ஆர் லேஅவுட் போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
குழந்தையில் தந்தை கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்த போலிஸார், இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது Father kills child by car.
இதையும் படிங்க : ”கூத்தாண்டவர் கோவில் திருவிழா..” திருநங்கைகள் தாலிகட்டிக் கொண்டாட்டம்!