இஸ்ரோவின் 100-வது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட நேவிகேஷன் செயற்கைக்கோளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரோ தனது 100ஆவது ராக்கெட் மூலம் NVS-02 என்ற நேவிகேஷன் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.
Also Read : கக்கூஸ் போனது ஒரு குற்றமா..? சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!
இந்நிலையில் தற்போது இந்த செயற்கோளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயற்கைக்கோளை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட இந்த கோளாரை சரிசெய்து செயற்கைக்கோளை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த மாற்று உத்திகளை உருவாக்கி வருவதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.