புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ரசிகர்களின் கூட்டநெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த 5 தேதி கோலாகலமாக வெளியானது.
இதில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படம் திரையிட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது .
Also Read : மன்னார் வளைகுடாவில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்தது..!!
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதற்கிடையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூபாய் 25 லட்சம் வழங்கி இருந்த நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் சந்தியா திரையரங்கிற்கு வருவது குறித்து தியேட்டருக்கு எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி பொறுப்பற்ற முறையில் வந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் மீது கைது நடவடிக்கை பாய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.