பீகாரில் குடுமிப்பிடி சண்டை போட்ட டீச்சர்கள்…காரணம் என்ன..?

பிகாரில் மாணவர்கள் கண் முன்னே டீச்சர்களும், தலைமை ஆசிரியையும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பிஹ்தா என்ற இடத்தில் உள்ள நடுநிலை பள்ளி ஒன்றில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சண்டைக் காட்சிகளை மாணவர்கள் சிலர் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டதால் தற்போது இந்த காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவத்தின் போது வகுப்பறை ஒன்றுக்குள் தலைமை ஆசிரியை நுழைந்து அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த டீச்சருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர் தலைமை ஆசிரியை வெளியே வந்த பிறகு அந்த டீச்சர் கையில் காலனியை வைத்துக்கொண்டு தலைமை ஆசிரியை பின் தொடர்ந்து செல்கிறார்.

இதனைக் கண்டதும் மற்றொரு ஆசிரியையும் தலைமை ஆசிரியையை துரத்திச் சென்று தாக்குகிறார். இரண்டு ஆசிரியைகள் ஒன்று சேர்ந்து தாக்கியதால் தலைமை ஆசிரியை அருகில் இருந்த வயல்வெளியில் கீழே விழுந்து விடுகிறார்.

இருப்பினும் தொடர்ந்து அந்த இரண்டு ஆசிரியைகளும் தலைமை ஆசிரியையை கடுமையாக தாக்குகின்றனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து விலக்கிய பிறகுதான் அந்த சண்டை முடிவுக்கு வருகிறது.

மாணவர்களின் கண் முன்னே நிகழ்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் வகுப்பறையின் ஜன்னலை மூடும் பிரச்சனையில் தான் இந்த மோதல் வெடித்ததாக கூறப்பட்டாலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சண்டை நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பான துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதால் விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக மாணவர்கள் தான் வகுப்பறையில் சண்டையிட்டு கொள்வார்கள். ஆனால் மாணவர்களின் கண் முன்னே ஆசிரியைகளும், தலைமை ஆசிரியையும் கட்டிப் புரண்டு சண்டையில் ஈடுபட்டது அந்த பள்ளி மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Total
0
Shares
Related Posts