முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் திடீர் உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்று தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.