ஆகஸ்டில் சர்வதேச சர்ஃபிங் லீக் நடக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் முதல்முறையாக சர்ஃபிங் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 7-ஆம் தேதி தமிழக சட்டபேரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அதில், பேசிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,மாமல்லபுரத்தில் உலக அளவிலான சர்ஃபிங் லீக் போட்டிகள் நடத்தப்படும் எனவும், இந்த போட்டிகளை நடத்துவதற்கு ரூ.2.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 14 முதல் 20 வரை சர்வதேச சர்ஃபிங் போட்டி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இப்போட்டியை தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேஷன், இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் இணைந்து நடத்தவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.