இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் கேஎல் ராகுலின் ஆட்டம் மோசமாகி உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
சர்வதேச கிரிக்கெட்டில் 8 வருடங்களுக்கு மேலாக 46 டெஸ்ட்களில் விளையாடி 34 என்ற டெஸ்ட் சராசரியை பெற்றிருப்பது மிகவும் மோசமானது என்று தெரிவித்த வெங்கடேஷ் பிரசாத் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை .
A few people thinking i have something personal against KL Rahul. Infact it is the opposite. I wish well for him and playing him in such form was never going to enhance his confidence. For him to earn his place back in Test cricket, now that the domestic season has ended, cont.
— Venkatesh Prasad (@venkateshprasad) February 19, 2023
மேலும் இந்தியா கிரிக்கெட்டில் ஷுப்மான் கில் அபாரமான ஃபார்மில் இருக்கிறார், சர்ஃபராஸ் (கான்) எஃப்சி (முதல் தர) கிரிக்கெட்டில் சதங்கள் அடித்து வருகிறார்கள் kl ராகுலுக்கு முன்னால் வாய்ப்புக்கு தகுதியானவர்கள் பலர் உள்ளனர்.
இருப்பினும் சிலர் வெற்றி பெறும் வரைதிறமை வாய்ந்தவர்களாக கருதி வாய்ப்புகள் வழங்கப்படுவது அதிர்ஷ்டசாலிகள், சிலருக்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில் கே.எல். ராகுலின் திறமை மற்றும் பேட்டிங்கை கண்டு நான் மிகவும் மதிக்கிறேன், ஆனால் தற்பொழுது அவரது துரதிர்ஷ்டவசமாக பேட்டிங்க் திறமையை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று பிரசாத் மேலும் கூறினார்.
A few people thinking i have something personal against KL Rahul. Infact it is the opposite. I wish well for him and playing him in such form was never going to enhance his confidence. For him to earn his place back in Test cricket, now that the domestic season has ended, cont.
— Venkatesh Prasad (@venkateshprasad) February 19, 2023
மேலும் இந்தியா கிரிக்கெட் அணியில் பிரசாத் ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற ஒருவரை ரோஹித் ஷர்மாவின் துணை ஆட்டக்காரராக நியமிக்கத்தாது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அஸ்வினுக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது, டெஸ்ட் வடிவத்தில் துணை கேப்டனாக இருக்க எல்லாவித தகுதிகளும் உள்ளது . இல்லை என்றால் (சேதேஷ்வர்) புஜாரா அல்லது (ரவீந்திர ஜடேஜா) ஜடேஜாவாக வாய்ப்பு அளித்து இருக்கலாம்
கடந்த டெஸ்ட் போட்டிகளில் ராகுலை விட மயங்க் அகர்வால் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார், அதேபோல் (ஹனுமா) விஹாரியும் செய்தார். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இந்தியாவின் மகத்தான வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.ஆனால் இவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்க வில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.