எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது (Fishermen arrest) செய்துள்ளது சக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது.
அதைதொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.
இதையும் படிங்க : Udhayanidhi: மத அரசியலா- மனித அரசியலா? – ஒரு கை பார்த்துவிடுவோம்! -உதய்
நடுக்கடலில் தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வழிமறித்தனர்.
பின்பு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும், அதில் இருந்த 18 மீனவர்களையும் கடந்த 16ம் தேதி கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது (Fishermen arrest) செய்துள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. மேலும் மீனவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
https://x.com/ITamilTVNews/status/1749667562684882970?s=20
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறப்படும் 6 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சிறைப்பிடிக்கபட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.