கோடை காலத்தில் செய்தி சேகரிக்கும் போது, ஊடகவியலாளர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த ( pmmodi ) வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது :
கோடை காலத்தில் செய்தி சேகரிக்கும் போது, ஊடகவியலாளர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, மேலும் உங்களுக்கு தெம்பைத் தரும்.
Also Read : இ-பாஸ் சந்தேகம்? – தொலைபேசி எண்களை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்..!!
இந்தியாவின் தேர்தல் செயல்முறை, தேர்தல் மேலாண்மை உலக ஜனநாயக நாடுகளுக்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறது. சுமார் 64 நாடுகளில் தேர்தல்கள் நடக்கின்றன; உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்து ஒப்பிட வேண்டும்.
இந்த தேர்தல் ஆண்டு ஜனநாயகத்தின் கொண்டாட்டம் போன்றது; திரளான மக்கள் வாக்களித்து ( pmmodi ) ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.