உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நீட் பயிற்சி மாணவர்களுக்கு சக மாணவர்களால் அரங்கேறியுள்ள கொடூரம் இது இந்தியா தானே… ஆப்கன் இல்லையே என்னும் கேள்வியை எழுப்பி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள லாவேடி காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கான்பூரில் தங்கியிருந்து அங்குள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது ஆன்லைன் பந்தய விளையாட்டில் தோல்வியடைந்ததற்கு ரூ.20,000 தரவேண்டும் என்று சக மாணவர்கள் அவரை மிரட்டியுள்ளனர். தங்கள் கையில் இருந்த சிறிய ரக எல்பிஜி கேனில் நெருப்பை பற்றவைத்து மாணவரின் தலைமுடியை கருக்கி உள்ளனர். மேலும் உடலிலும் சூடு வைத்துள்ளனர். அப்போது அந்த மாணவரின் தோழி, தாக்கிய மாணவர்களிடம் விட்டு விடக் கூறியபோது வட்டியுடன் சேர்த்து ரூ.50,000 கொடு என்று அவரை மிரட்டி உள்ளனர். அந்த மாணவியையும் தாக்கி உள்ளனர். மேலும் மாணவரின் அந்தரங்க உறுப்பில் செங்கல்லை கட்டி தொங்க விட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
அத்தோடு இந்த கொடூரங்களை எல்லாம் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளனர்.
This torture is not given in Afghanistan but in Kanpur, Uttar Pradesh.
இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் இது இந்தியாதானா அல்லது ஆப்கானிஸ்தானா என்று தங்கள் ஆவேசங்களை பதிவாக்கி இருந்தனர்.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக சக மாணவர்களான தனய் சவுராஷியா, அபிஷேக் குமார் வெர்மா, யோகேஷ் விஸ்வகர்மா, சஞ்சீவ் குமார் யாதவ், ஹர்கோவிந்த் திவாரி, சிவா திரிபாதி ஆகிய 6 பேரை கைது செய்துள்ளதாக, டிசிபி தெரிவித்துள்ளார்.