சிறையில் யூட்டியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டார் என்ற செய்திகள் பரவிய நிலையில், இதற்கு கோவை மத்திய சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேனியில் கைது செய்து கோவையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடந்த சனிக்கிழமையன்று மத்திய சிறையில் அடைத்தனர்.
அதற்கு முன்னதாக கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு சிறையில் அடைப்பதற்கு முன்பு சிறையில் உள்ள மருத்துவமனையில் சவுக்கு சங்கரை பரிசோதனை செய்துவிட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் , சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர்,” சனிக்கிழமை இரவு சவுக்கு சங்கர் மீது 10″க்கும் மேற்பட்ட காவலர்கள் பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி பலமாக தாக்கி உள்ளனர்.
இதில் சவுக்கு சங்கருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,
சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாகவும்,கடலூரில் சிறை கண்காணிப்பாளராக இருந்த செந்தில் குமார் தற்போது கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக இருப்பதால் சவுக்கு சங்கரை பழி வாங்கும் நோக்கில் கோவையில் வழக்கு பதிவு செய்து சித்திரவதை செய்து வருவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் வழக்கறிஞரின் குற்றசாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தனது கண்டனத்தினை பதிவு செய்திருந்தார்.இது குறித்து அவர் வெளியிட்டு இருந்த டிவிட்டர் பதிவில்,”
கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரே நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.
மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.
சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும்.
எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில்,”சிறையில் யூட்டியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டார் என்ற செய்திகள் பரவிய நிலையில், இதற்கு கோவை மத்திய சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.இதற்கிடையில், காவலர்கள் தரப்பில் இருந்தும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், விரும்பதாக, தரக்குறைவான வார்த்தைகளால் சவுக்கு சங்கர் பேசியது தங்களை மிகவும் பாதித்துள்ளதாகவும், எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் காவலர்கள் கவலை தெரிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.