நாம சாப்பிடற உணவுப்பொருட்கள் தரமானதா இருக்கான்ற கேள்வி நமக்கு எழுறதுண்டு. அப்படி நாம குடிக்கிற தண்ணீர்ல இருந்து சாப்பிடுற அனைத்து வகையான உணவு பொருட்களையும் இருக்குற கலப்படத்த, தரமற்ற உணவுப்பொருட்களை ஆய்வு செய்து அதை அழிக்கின்ற வேலையை நமது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தினமும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இன்றைக்கு சென்னை – விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியில் செயல்பட்டு வந்த குடிநீர் நிலையத்தில் உணவுப்பாதுகாப்பு அதிகாரி திரு.சதீஷ்குமார் தலைமையிலான குழு அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
ஆத்மா அக்வா என்ற அந்த நிறுவனத்துல போதிய வசதிகள் மற்றும் அனுமதி இல்லாம கேன் வாட்டர் உற்பத்தி ஈடுபடுத்தவாகவும் ,சுகாதாரமற்ற நிலையில் அந்த நிறுவனம் செயல்படுறதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில இந்த அதிரடி ஆய்வு நடத்தப்பட்டிருக்குறதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வின் போது, சுகாதாரமற்ற நிலையில் இருந்த இயந்திரங்கள், வாட்டர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் அந்த பகுதியில் ஓரிரு இடங்களில் உயிரினங்கள் இறந்து கிடந்தன.மேலும் அந்த ஆய்வின் மமுடிவில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த வாட்டர் கேன்கள் உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதை தொடர்ந்து போதிய வசதிகளை மேம்படுத்தாமல் ஆலையை இயக்க கூடாது என்றும் உரிமையாளரை உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
உணவுப்பாதுகாப்பு அதிகாரிகளின் இந்த திடீர் ஆய்வாய் தொடர்ந்து அந்த பகுதில சிறிது பரபரப்பு ஏற்பட்டது.