கொரோனா அச்சத்துடன் தொடங்கப்பட்ட நடப்பு 2022- 23 கல்வியாண்டு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. தற்போது, நேரடி வகுப்புக்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன (method exam).
மேலும், 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.
அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
மேலும், நடப்பாண்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பிப்ரவரியில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 10, 11, 12 ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு (method exam) தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு 6 முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னரே செய்முறை தேர்வுகளை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்முறை பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அதேபோல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. 12ம் வகுப்பு தேர்வு முடிவு மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவு மே 17ம் தேதியும் வெளியாகலாம்.
அதே போல், 11ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.