அதிகாரம் யாரிடமிருந்து இருக்கிறது என்று அமைச்சருக்கு தெரியாதா?என மனோ தங்கராஜுக்கு முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பால்வளத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்கள் குமரி மாவட்டம் கோழி விளை சோதனை சாவடியில் ஒரு ஆய்வு மேற்கொண்டார்.
அந்த ஆய்வில் தான் விமான நிலையத்திலிருந்து வருவதற்குள் 50க்கும் மேற்பட்ட கனிமவள லாரிகள் சாலையில் சென்றதாகவும் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்று அரசு தடை விதித்திருப்பது இருக்கிறது உங்களுக்கு தெரியவில்லையா? என்றும் சோதனை சாவடி ஊழியர்களை விளாசியிருக்கிறார்.
அனைத்து வாகனங்களையும் நிறுத்துங்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு போன் செய்து அனைத்து வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள் என்றும் அவேசமாக பேசி நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார்.
அவ்வாறு அமைச்சர் ஆய்வு செய்த உத்தரவிட்ட பிறகும் கனிமவள வாகனங்களின் படையெடுப்பு நிறுத்தப்படவில்லை முன்பை விட அதிகமாகவே இருக்கிறது. ஆய்வுக்குப் பின்னும் கனிமவள வாகனங்கள் அளவுக்கு அதிகமாக செல்வதற்கு என்ன காரணம்? என்று அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் அமைச்சர் ஒரு பேட்டியில் கனிமவள கடத்தலை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது என்று சொல்லி அதிர வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கனிமவளத்துறை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறதா? மாநில அரசின் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்பது கூட தெரியாமல் ஒரு அமைச்சர் பேசி இருப்பது விந்தையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
தமிழகத்திலேயே படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் என்று பெருமிதம் கொள்ளும் குமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சருக்கு இந்த சிறிய விஷயம் கூட தெரியவில்லை என்றால் அவர் அமைச்சர் பதவியை வகிக்கவே தகுதி இல்லாதவர் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உண்மையில் இதை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது 25 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி ஆற்றிலிருவது மணல் அள்ளப்பட்டு கடத்தப்பட்டதால் தற்போது கட்டுமானப் பணிகளுக்கு மணல் என்பதே இல்லாமல் போய் விட்டது.
இதன் பிறகுதான் ஆற்று மணல் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது என்று மாநில அரசால் தடை விதிக்கப்பட்டது அதே போல் இப்போது கடத்தப்படும் கனிம வளங்கக்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் அபாயாம் இருக்கிறது.
நம்முடைய இயற்கை வளங்களை பாதுகாக்க ஜல்லி, குண்டு கற்கள், போன்றவற்றை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது என்று அரசு தடை விதிக்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் ஏன்முயற்சி எடுக்கக் கூடாது? உண்மையிலேயே கனிம வளங்கள் கடத்தப்படுவது தடுக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்களுக்கு அக்கறை இருந்தால் முதல்வரிடம் இதுகுறித்து பேசி இந்த சட்டத்தை கொண்டு வரலாமே?
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக உருவாகி இருக்கும் இந்த கனிம வளங்கள் மீண்டும் உருவாக வேண்டுமென்றால் இன்னும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகும். எவ்வாறு அண்டை மாநிலங்கள் தங்கள் கனிம வளங்களை பாதுகாக்கின்றனவோ அதைப்போல நமது மாநிலமும் நமது கனிம வளங்களை பிற்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும் .
அதற்கு அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு நாள் சோதனை என்ற பெயரில் ஊரைக் கூட்டி கூப்பாடு போடுவதெல்லாம் வெற்று விளம்பரம்தான்..என்று குற்றம்சாட்டியுள்ளார்.