கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளவின் முன்னாள் முதல் அமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவருமான அச்சுதானந்தன், 2006ஆம் ஆண்டில் முதன் முதலில் முதலமைச்சராக பதவியேற்றார்.
தற்போது அவரது உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாக மோசமடைந்துள்ளதால் அரசியல் ரீதியாக பெரிதாக செயல்படாத அச்சுதானந்தன், தனது மகன் குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அச்சுதானந்தனுக்கு திடீர் என உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அச்சுதானந்தனுக்கு இரைப்பை, குடல் அழற்சி மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளதாகவும், அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.