டுவிட்டருக்கு போட்டியாக அந்நிறுவன முன்னாள் சி.இ.ஓ ஜாக் டோர்சி(Jack Dorsey) புளுஸ்கை என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ப்ளூ ஸ்கை செயலி தொடர்பாக அந்நிறுவனம் தெரிவித்த தகவலின்படி,
“அடுத்த கட்டமாக நெறிமுறையைச் சோதிக்கத் தொடங்க வேண்டும். விநியோகிக்கப்பட்ட நெறிமுறை மேம்பாடு ஒரு தந்திரமான செயலாகும்” என்று நிறுவனம் இந்த வார தொடக்கத்தில் ஒரு செய்தி வெளியீட்டில் பகிர்ந்து கொண்டது. “ஒரு நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டவுடன் இதற்கு பல தரப்பினரின் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. எனவே சிக்கல்களைத் தீர்க்க தனிப்பட்ட பீட்டா டெஸ்ட்டின் மூலம் தொடங்கப் போகிறோம்.
“நாங்கள் பீட்டா சோதனை செய்யும் போது, நெறிமுறை விவரக்குறிப்புகளை மீண்டும் மீண்டும் செய்வோம். மேலும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய விவரங்களைப் பகிர்வோம். அது தயாரானதும், Beta test-லிருந்து அனைவரும் பயன்படுத்தும் வகையில், ப்ளூ ஸ்கை ஆப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
புதிய பயன்பாடு அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்ற நெறிமுறையை (AT நெறிமுறை) பயன்படுத்தும் என்று அந்த அறிக்கை கூறியிருக்கிறது. இது ஒரு தளத்திற்கு பதிலாக பல தளங்களால் நடத்தப்படும் கூட்டமைப்பு Social media Website ஆகும்.
“Blue Sky'(ப்ளூஸ்கை) என்ற சொல் ஒரு பரந்த-திறந்த பெயராக இருக்கிறது. இந்த திட்டமானது வடிவம் பெறுவதற்கு முன்பு அதுவே அதன் அசல் பெயராகும். மேலும் இது எங்கள் நிறுவனத்தின் பெயராகத் தொடர்கிறது” என்று அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “நாங்கள் உருவாக்கும் பயன்பாட்டை ’ப்ளூஸ்கை’ என்று அழைக்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் டுவிட்டர் சி.இ.ஓ. ஜாக் டோர்சி(Jack Dorsey) கடந்த வாரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ப்ளூ ஸ்கை “சமூக ஊடகங்களுக்கான அடிப்படை அல்லது அதைப் பயன்படுத்தும் நபர்களின் தரவுகளை சொந்தமாக்க முயற்சிக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் ஒரு போட்டியாளராக” இருக்க விரும்புகிறது. என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக ஜாக் டோர்சி(Jack Dorsey) நவம்பர் 2021 இல் ட்விட்டர் CEO பதவியில் இருந்தும், மே 2022 இல் ட்விட்டர் குழுமத்திலிருந்தும், முன்னதாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.