உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஐ.மகேந்திரன்(i mahendran) முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஐ.மகேந்திரன் அமமுக தலைமைக் கழக செயலாளர், மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேலும் அதிமுகவில் நடந்த உட்கட்சி பூசல் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி டிடிவி.தினகரன் புதிய கட்சி துவங்கியதும் அக்கட்சியில் இணைந்தார். 2019-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் தோல்வியை சந்தித்தார்.
இந்த நிலையில்,உசிலம்பட்டியில் தனக்கென தனி செல்வாக்குடன் இருப்பவர் என்பதை அடுத்தடுத்த தேர்தலில் நிரூபித்தவர். டிடிவி தினகரனின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். இவர் நேற்று முன்தினம் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
ஐ.மகேந்திரன் அதிமுகவில் இணைந்த சம்பவம் அமமுக மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.