hosur சேலத்தில், மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் ரூ.6.70 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,
ஓசூர் மருத்துவமனையை ரூ.100 கோடியில் தரம் உயர்த்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தலைமைச் செயலகத்தில், சுகாதாரத்துறை சார்பில் ஓசூர் மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திரூ.100 கோடி மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் செவி மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக சேலம் மாவட்டம்,ஏற்காடு அடிவாரம்,
கொண்டப்பநாயக்கன்பட்டியில் ரூ. 6.70 கோடிசெலவில் கட்டப்பட்டுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கான புதியகட்டிடத்தை முதல்வர் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் தடையற்ற சூழலுடன் கல்வி பயில்வதற்கு ஏதுவாக, அனைத்து அறைகளிலும் ஒளிரும் விளக்குகள், வழிகாட்டி பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க :https://itamiltv.com/major-scam-in-neet-medical-exams-found-in-kovai/
பணி நியமனம்:
மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் நிலை-3 பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 64 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
அதேபோல், மிக்ஜாம் புயல்,தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையின் போது சிறப்பாக பணியாற்றிய ‘108’ அவசரகால ஊர்தி பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
இதில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : http://Dmk-”சூடுபிடிக்கும் நாடாளுமன்றத் தேர்தல்..” களமிறங்கிய திமுக!
இந்த நிகழ்ச்சி குறித்து ஒசூா் சட்டமன்ற உறுப்பினா் அர.சக்கரபாணி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிய வகையில் மருத்துவம் கிடைக்க ஏதுவாக,
மருத்துவத் துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் (Hosur) மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 100 கோடி மதிப்பில் ஒசூா் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த
தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.
ஒசூா் அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தில் முதன்மை மருத்துவ வளாக கட்டடம் தரைத்தளம் மற்றும் ஆறு தளம் வரை 2,17,071 சதுர அடி பரப்பளவிலும்,
தரைத்தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கதிா் இயக்க துறை மற்றும் மருந்தகமும், முதல் தளத்தில் புறநோயாளிகள் பிரிவு, அவசர அறுவை சிகிச்சை அரங்கம், ஆகியவை கட்டப்பட உள்ளன.
காச நோய் மற்றும் தொழுநோய் பிரிவுகளுக்காக 145 ச.மீ. பரப்பளவில் தனித்தனியாக இரண்டு சிகிச்சைப் பிரிவு கட்டடமும், 115.70 ச.மீ. பரப்பளவில் சலவை அரங்கக் கட்டடமும்,
120 ச.மீ. பரப்பளவில் பிணவறை கட்டடமும், 63 ச.மீ. பரப்பளவில் மருத்துவ கழிவுகள் அகற்றும் அறை, 150.15 ச.மீ. பரப்பளவில் சிற்றுண்டி கட்டடமும் கட்டப்பட உள்ளன என தெரிவித்தாா்.